தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு

தே.தொ.ப.ப.தி. ஏன்?

தொழிற்சாலைகள் - தே.தொ.ப.ப.தி. ஏன்?

இந்திய அரசின் சிறப்புமிக்க முன்னோடித் திட்டமான தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றத் தேவைப்படும் திறன்கள் மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதேயாகும். சந்தையில் கிடைக்கும் மாணவர்களது திறனின் தகவல் தொகுப்புகள் (Pool), வேலையளிப்போரின் பணியாளர் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதாக இத்திட்டம் அமைகிறது. நிறுவனங்கள் பணியனுபவமற்ற தொழில்நுட்பத் தகுதி பெற்றவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு அரசிடம் நிதியுதவி பெற்று ஓராண்டுக்குப் பயிற்சியளித்து, பின்னர் பணியாளர்கள் தேவைப்படும்போது அவர்களை நிரந்தரப் பணியிடங்களில் நியமித்து உட்படுத்திக் கொள்ளவும் இத்திட்டம் வழிசெய்கிறது. தொழில் பழகுநர்கள் அனைவரும் 1961-ஆம் ஆண்டில் தொழில் பழகுநர் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். தொழில் பழகுநர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் பயிற்சியளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் பயிற்சி பெற்ற மேலாளர்களையும் பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாறு தேசியத் தொழில் பழகுநர் திட்டம் தொழில்துறைத் தேவைகளை நிறைவேற்றத் தயாராக உள்ள நிலையான திறன் பொதுச் சேர்மத்தை உருவாக்க உதவுகிறது; இது ஒரு நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தேவைகளைப் பெரிதும் உகந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ள உதவுகிறது.

கீழ்க்கண்டவை தொழிற்சாலைகளுக்கான சில நன்மைகள்:

  • வேண்டும் பணிகள்
  • தொழில் பழகுநர் பயிற்சி பெறுவோரைத் தெரிந்தெடுத்தல்
  • வேலைக்கான குறிப்புகள் அளித்தல்

உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்

Copyright © 2018 NATS. All Rights Reserved.